மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 824 கன அடியாக குறைவு

Jan 19, 2020 10:48 AM 898

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 824 கன அடியாக குறைந்துள்ளது.


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததன் காரணமாக , கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 882 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 824 கனஅடியாக குறைந்துள்ளது.

அதன்படி, காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109 புள்ளி 20 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 77 புள்ளி 278 டி.எம்.சியாக உள்ளது. இந்த நிலையில், அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 4 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்படுகிறது.

 

Comment

Successfully posted