குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு!

May 22, 2020 06:31 PM 745

காவிரி டெல்டா பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டப் பணிகளை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை தீவிரப்படுத்தவும், விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் மற்றும் உரங்களை போதுமான அளவு இருப்பு வைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை மேற்கொள்வதற்காக, 67 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Comment

Successfully posted