மேட்டூர் அணையின் நீர்வரத்து 20,000 கனஅடியாக குறைவு!

Aug 12, 2020 05:36 PM 687

மேட்டூர் அணையின் நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியிலிருந்து 20 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணையின் நீர்வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக நீர்வரத்து குறையத் துவங்கியுள்ளது. அந்த வகையில், நேற்று 40 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 20 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 97 புள்ளி 27 அடியாகவும், நீர் இருப்பு 61 புள்ளி 36 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், அணை 100 அடியை எட்ட காலதாமதம் ஆகிறது.

Comment

Successfully posted