மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தொட்டது

Aug 02, 2019 12:02 PM 239

தொடர் நீர்வரத்தின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81 நாட்களுக்கு பிறகு 50 அடியை தொட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சீராக அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

81 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 50 அடியைத் தாண்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் 10,000 கன அடியாகவும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,000 கனஅடியாகவும் உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted