மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

Aug 13, 2018 10:26 AM 362

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக,  அங்குள்ள அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டநிலையில், கர்நாடகாவில் மழை குறைந்ததின் காரணமாக திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் கனஅடியில் இருந்து, ஒரு லட்சத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 புள்ளி 30 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 95 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால், இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2வது முறையாக நிரம்பி உள்ளது. இதனிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருப்பதால், காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted