அயர்லாந்து நாட்டின் அதிபராக மிக்கேல் டி ஹிக்கின்ஸ்(Michael D Higgins) தொடர்ந்து 2-வது முறையாக தேர்வு

Oct 29, 2018 10:21 AM 273

அயர்லாந்து நாட்டின் அதிபராக மிக்கேல் டி ஹிக்கின்ஸ்(Michael D Higgins) தொடர்ந்து 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அயர்லாந்து நாட்டில் கடந்த 26-ந் தேதி அதிபர் தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் அதிபர் மிக்கேல் டி ஹிக்கின்ஸ் (Michael D Higgins) மீண்டும் போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்ட அவரை எதிர்த்து பீட்டர் கேசி, சியான் கலாகெர் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி அதிபர் மிக்கேல் டி ஹிக்கின்ஸ்(Michael D Higgins) 55.8 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அயர்லாந்தில் அதிபரின் பதவிக்காலம் 7 ஆண்டுகளாக உள்ள நிலையில், அவரை முக்கியமான 3 கட்சிகளும் ஆதரித்துள்ளன. அந்த நாட்டின் சட்டப்படி ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபர் பதவி வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted