அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு!

Jun 29, 2020 05:56 PM 617

அயர்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மைக்கேல் மார்டின் அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அயர்லாந்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக கூட்டணி ஆட்சி அமைக்க நாட்டின் முக்கிய இருபெரும் கட்சிகளான பியானா பெயில் மற்றும் பைன் கெயில் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஒப்புக் கொண்டன. இதையடுத்து பிரதமரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 160 உறுப்பினர்களில் 93 பேர் பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் மைக்கேல் மார்ட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவரது தலைமையில் 15 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். 2022 ஆம் ஆண்டு வரை மைக்கேல் மார்ட்டின் பிரதமர் பதவியில் இருப்பார் என்றும், அதன் பிறகு பைன் கெயில் கட்சியின் தலைவர் லியோ வரட்கரிடம் பொறுப்பை ஒப்படைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comment

Successfully posted