அமெரிக்காவில் டிக் டாக் செயலி சேவையை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை!

Aug 01, 2020 12:14 PM 869

அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக்டாக் மொபைல் செயலிக்கு தடை விதிக்க ஆலோசித்து வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிக் டாக் செயலிக்கு இந்தியா தடை விதித்ததை தொடர்ந்து, பல நாடுகள் அதனை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன. டிக் டாக் செயலி குறித்து முக்கிய முடிவெடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் டிக் டாக் செயலி சேவையை வாங்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Comment

Successfully posted