பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் கத்தியைகாட்டி மிரட்டி பணம் கொள்ளை

Sep 10, 2021 01:20 PM 1313

ராமநாதபுரத்தில், பெட்ரோல் பங்கில் ஆயுதங்களுடன் வந்து பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை, சிசிடிவி உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்... 

ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாந்தரவை மின்துறை அலுவலகம் அருகே, பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. அதில், இரவு நேரங்களில் குறைவான ஊழியர்களே பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில், பங்க்குக்குள் இருசக்கர வாகனத்தில் 3 பேர் நுழைந்தனர். முகமூடி அணிந்துவந்த அவர்கள், திடீரென ஊழியர்கள் அமர்ந்திருந்த மேஜையை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். மேலும், பணத்தை எடுத்துத்தர ஊழியர்களை மிரட்டி, அவர்களே கல்லாப்பெட்டியில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டனர். பின்னர், வேகமாக இருசக்கர வாகனத்தில் ஏறி, தப்பிச் சென்றனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

மர்ம நபர்கள் தாக்கியதால் ஊழியர்கள் காயமடைந்த நிலையில், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, கீழக்கரை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இருசக்கர வாகனங்களை, அருகில் உள்ள பகுதியில் நிறுத்திவிட்டுத் தப்பிச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். 

Comment

Successfully posted