பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்த போலி சி பி ஐ அதிகாரி கைது

Jan 14, 2020 06:39 PM 768

சென்னையில்  பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்த போலி சி பி ஐ அதிகாரியை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை  மாநகர பேருந்தில் பயணித்த ஒருவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக டிக்கெட் பரிசோதகர் வெங்கடேசன் என்பவர் அயனாவரம் காவல்
நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவர்களில் ஒருவர் தாம் சி.பி.ஐ.அதிகாரி எனவும் முன்னுக்கு பின் முரனாகவும்  பேசி வருவதாகவும் அவர் கூறினார்...
 
அவரை பிடித்து  காவல்துறை விசாரித்த போது போலியான சி.பி.ஐ அதிகாரி அடையாள அட்டை,வருமான வரித்துறை அதிகாரி அட்டை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர், கொடுங்கையூரைச் சேர்ந்த ரஹீம்  என்பதும், சிபிஐ அதிகாரி, வரித்துறை அதிகாரி  என போலியாக அடையாள அட்டையை தயாரித்து, பொதுமக்களையும் நிறுவனங்களையும்  மிரட்டி கோடிக்கணக்கில் பணமோசடி செய்து வந்ததும் தெரியவந்தது... அவர் மீது எழும்பூர் மற்றும்
வண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் பல்வேறு  வழக்குகள்  நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது...

Comment

Successfully posted