பேருந்து இயக்கம் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

Jun 03, 2020 12:26 PM 3701

புதுக்கோட்டை மாவட்டத்தில், 70 நகரப் பேருந்துகளும், 122 புறநகர் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, பேருந்து போக்குவரத்து தொடங்குவது குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்நிலையில், காலை 5.30 மணிக்கு தொடங்கிய பேருந்து போக்குவரத்து, இரவு 8.30 வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் 60 சதவீத பயணிகளை மட்டுமே கொண்டு இயக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, அரசின் வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

Comment

Successfully posted