கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை!

Aug 02, 2020 08:43 AM 411

விழுப்புரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆயிரத்து 250 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் தடுப்பு நடவடிக்கைகளில் செயல்படாத அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Comment

Successfully posted