திமுக எம்.எல்.ஏ ராதாமணி உயிரிழப்பு: அமைச்சார் சி.வி.சண்முகம் அஞ்சலி

Jun 15, 2019 05:54 PM 116

மறைந்த விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடலுக்கு சட்டத்துறை அமைச்சார் சி.வி.சண்முகம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாமணி. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2 வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த இவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது உடல் சொந்த ஊரான கலிஞ்சிக்குப்பம் கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், மறைந்த ராதாமணி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Related items

Comment

Successfully posted