வாய்க்கால் சீரமைப்பு பணியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைத்தார்

Dec 02, 2019 07:13 AM 358

திண்டுக்கல் அருகே, 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வாய்க்கால் சீரமைப்பு பணியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.

வத்தலக்குண்டு அருகே ,செங்கட்டான்பட்டியில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு, தனியார் நிறுவனத்தின் உதவியுடன், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செங்கட்டாம்பட்டி- செங்குளம் வரத்து வாய்க்கால்களை தூர்வாரும் பணியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். செங்கட்டான்பட்டி, விராலிப்பட்டி, குளத்துப்பட்டி, தும்மளப்பட்டி, சின்னம நாயக்கன் கோட்டை என 19 கிலோமீட்டர் தூரத்திற்கான வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் எம். விஜயலெட்சுமி,
ஏராளமான விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted