ஏரி, குளங்களை ஆக்கிரமித்து மக்கள் குடியேறக் கூடாது- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Feb 03, 2020 07:01 AM 395

தண்ணீர் தேங்கும் ஏரி, குளங்கள் போன்ற இடங்களை ஆக்கிரமித்து குடியேறக் கூடாது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெற்ற உலக ஈர நிலங்கள் நாள் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வர வேண்டும் எனவும், ஏரி, குளங்களை ஆக்கிரமித்து குடியேறக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.  பள்ளிக்கரணை, கொரட்டூர் ஏரிகளை தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Comment

Successfully posted