"சர்கார்" படத்தில் சர்ச்சை வசனம் - நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை

Nov 07, 2018 01:08 PM 651

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் "சர்கார்". தமிழக அரசியல் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அரசியல் வசனங்களை அழுத்தமாக பேசியுள்ளார்.

இந்நிலையில், "சர்கார்" படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வளர்ந்து வரும் நடிகர் விஜய் இதுபோன்று நடித்திருப்பது நல்லதல்ல என குறிப்பிட்டார்.

"சர்கார்" திரைப்படம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted