சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமைச்சர் காமராஜ் ஆய்வு!!

Jul 13, 2020 04:07 PM 464

வல்லுநர்களின் ஆலோசனை அடிப்படையில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் கங்காராம் தோட்டம் பகுதியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை குறைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வல்லுநர்கள் குழு அளித்த ஆலோசனையின் அடிப்படையில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted