குடியுரிமை மசோதாவை ஆதரித்தது கொள்கை முடிவின் அடிப்படையிலானது: அமைச்சர்

Dec 19, 2019 07:48 AM 213

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நடுக்குத்தகை பகுதியில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துத் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரித்தது கொள்கை முடிவின் அடிப்படையிலானது எனவும், யாருடைய நிர்ப்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார்

Comment

Successfully posted