புதிய கல்குவாரிகள் மூலம் கூடுதல் தண்ணீரை வினியோகிக்க நடவடிக்கை: பாண்டியராஜன்

Jun 20, 2019 01:20 PM 323

தண்ணீர் பிரச்னையை தீர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதிய கல்குவாரிகள் மூலம் கூடுதலாக தண்ணீரை எடுத்து வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரம் மாநகராட்சி மைதானத்தில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னையில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு தான் என்று கூறிய அவர், குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க போர்க்கால நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாகவும் புதிய கல்குவாரிகள் மூலம் கூடுதலாக தண்ணீரை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Comment

Successfully posted