ஸ்டாலினின் பேச்சுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

Feb 25, 2020 09:12 PM 506

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை அறிவிப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று கேட்டதன் மூலம், ஸ்டாலின் தன்னுடைய தகுதியை இழந்துவிட்டதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, மதுரையில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஊர்வலமாக சென்றனர். இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை ஜீரணிக்க முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின், அவதூறாக பேசி வருவதாக தெரிவித்தார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நிகழ்ச்சியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Comment

Successfully posted