பாகிஸ்தானுடன் இனி வேறு எந்தப் பேச்சும் கிடையாது-அமைச்சர் ராஜ்நாத் சிங்

Aug 18, 2019 08:13 PM 237

பாகிஸ்தானுடன் இனிப் பேச்சு நடத்துவதாக இருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு நடத்தப்படும் எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது பாகிஸ்தானுடன் இனிப் பேச்சு நடத்த எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். அப்படிப் பேச்சு நடத்துவதாக இருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பற்றித் தான் பேச்சு நடத்த வேண்டி இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே, வெள்ளிக் கிழமை ராஜஸ்தானின் பொக்ரானில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தாது என்கிற கொள்கையை மாற்ற வேண்டி இருக்கும் எனத் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.

Comment

Successfully posted