பொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி!

Apr 09, 2020 01:30 PM 975

கோவை தீத்திபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார். தீத்திபாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முருங்கை, தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டன. விவசாயிகள் நலனைக் காக்கும் வகையில் உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி விற்பனை செய்யும் தற்காலிக சந்தைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் காய்கறிகளை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் வகையில் 200 நடமாடும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அப்போது குறிப்பிட்டார்.

Comment

Successfully posted