அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர வாக்கு சேகரிப்பு

Apr 15, 2019 02:17 PM 29

கடந்த திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டு பிரச்சினையை அதிமுக அரசு முற்றிலுமாக தீர்த்து வைத்தது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகேயுள்ள ஒருங்கிணைந்த பழங்கள் மற்றும் காய்கறி வணிக வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக நாகரிகமற்ற நிலையில் தான் சென்று கொண்டு இருக்கிறது என்றும், அதனால் தனி நபர் விமர்சனத்தை திமுக முன் வைக்கிறது எனவும் கூறினார். மக்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லாதால் ஸ்டாலின் அதிமுகவை குறை சொல்லி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted