கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ்!

Nov 30, 2020 08:02 AM 667

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கமணி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.


பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் குமாரபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மின்துறை அமைச்சர் தங்கமணி கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் மணிராஜ், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted