மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவளித்து வரும் தமிழக மக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி

Mar 22, 2020 04:37 PM 1261

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையில், தமிழக மக்கள் ஊரடங்குகிற்கு ஆதரவளித்து வரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் வீட்டிலேயே இருக்கும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை நாம் ஒன்றிணைந்து தடுப்போம் என குறிப்பிட்டுள்ள அவர், நமது உடல்நலனில் அக்கறை செலுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted