பாய் தொழிலாளர்களுக்கு நற்செய்தி... அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவிப்பு

Mar 31, 2021 12:15 PM 446

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, கயத்தாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற்று, வெளிநாடு ஏற்றுமதிக்கு நடவடிக்கை மேற்கொண்டதை குறிப்பிட்டார்.

அதேபோல், பாய் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து, அதற்கு உண்டான மூலப்பொருட்களை சிட்கோ மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உற்பத்தி செய்யப்படுகின்ற பாய்கள் அரசு மாணவ மாணவிகள் விடுதிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.

Comment

Successfully posted