எய்ம்ஸ் மருத்துவனை குறித்து மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை!

Oct 09, 2018 01:26 PM 449

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை அருகே தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அமைச்சரவை ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

image

 

image

image

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டாவை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் அப்போது உடன் இருந்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவது குறித்து மத்திய அமைச்சருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

Comment

Successfully posted