18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெற்றி - முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

Oct 25, 2018 12:31 PM 627

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெற்றி கிடைத்து இருப்பதை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அரசுக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சபநாயகரின் நடவடிக்கை செல்லும் என உயர்நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு அளித்துள்ளது.

இத்தீர்ப்பு அம்மாவின் அரசுக்கு கிடைத்த வெற்றி, இதன் மூலம் துரோகிகளுக்கு சரியான பாடம் புகப்பட்டுள்ளது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்தார்.

தீர்ப்பில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்களுடன் அடுத்த கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, வீரமணி, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலமைச்சருக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comment

Successfully posted

Super User

தர்மம் வென்றது அம்மாவின் ஆட்சி இனி வெற்றி மேல் வெற்றி சதிகலை முறியடித்து சாதனை நாயகன் எடப்பாடியார்வாழ்க.. என்று உங்கள் வழியில் கழக தொண்டன்..


Super User

நாம் கழகம் நாம் தாய் கழகம் நாம் அம்மாவின் ஆட்சி என்றும் அம்மாவின் ஆட்சி.இதுவே சாட்சி உண்மை