காணவில்லை விளம்பரம் கொடுத்தால் வருவாரா எம்.எல்.ஏ : பொதுமக்கள்

Jul 08, 2020 10:28 PM 491

சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் கார்த்திக், கொரோனா நோய் தொற்று அபாய காலத்தில் கூட தொகுதி மக்களை, வந்து எட்டிப் பார்க்கவில்லை என பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவிக்கின்றனர். திமுகவைச் சேர்ந்த கார்த்திக், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் பதவி ஏற்ற காலத்திலிருந்து இதுவரை தொகுதிப் பக்கமே வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் இந்த சூழ்நிலையில் கூட தொகுதி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க அவர் முன்வரவில்லை என கூறப்படுகிறது. பல தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படாத நிலையில் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். சிங்காநல்லூரில் போக்குவரத்து நெரிசல் கூட சீரமைக்கப்படாததால் கொரோனா தொற்று பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளைக் கூட தீர்க்காமல் திமுக எம்எல்ஏ கார்த்திக் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Comment

Successfully posted