மருத்துவமனையில் காணாமல் போன பெண் சடலமாக கண்டெடுப்பு

Jun 10, 2021 07:07 AM 1240

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த மவுலி என்பவரின் மனைவி சுனிதா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலோடு கடந்த மாதம் 21ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 23ஆம் தேதி முதல் சுனிதாவை காணாததால், இதுகுறித்து அவரது கணவர் சார்பிலும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையின் 8வது மாடியில் மின்சாதன பொருட்கள் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது, அழுகிய நிலையில் சடலம் இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர். பின்னர் கணவர் மவுலி அடையாளம் தெரிவித்த பின் அது சுனிதாவின் உடல் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்பிற்காண காரணம் தெரிய வரும் என்றும் கூறினார்.

Comment

Successfully posted