தப்பு தப்பாக மொழிபெயர்த்த தங்கபாலு

Mar 14, 2019 11:58 AM 2267

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சார தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களிடையே உரையாற்றினார். அப்போது, ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு தப்பு தப்பாக மொழி பெயர்த்தார். தங்கபாலுவின் இந்த மொழிபெயர்ப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"நாங்கள் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறோம்" என்று ராகுல் கூறியதற்கு, "நாம் அதற்காக தான் போராடிக் கொண்டு இருக்கிறோம், நம்முடைய வலிமை, வளமான இடத்தில் காட்டுவோம்" என்று தங்க பாலு மொழிபெயர்த்தார். அதே போல் "அதனால் தான் தமிழ் மக்கள் மீது நாங்கள் மரியாதை வைத்து இருக்கிறோம்" என்று ராகுல் கூறியதற்கு, "நரேந்திர மோடி தமிழ் மக்களுடைய எதிரி" என்று தங்க பாலு மொழிபெயர்த்தார்.

Comment

Successfully posted