இளைஞர்களின் கண்களைப் பார்த்து பேசும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை - ராகுல் காந்தி

Oct 10, 2018 01:08 AM 595

இந்திய இளைஞர்களின் கண்களைப் பார்த்து பேசும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில்,ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.இதையடுத்து அக்கட்சித் தலைவர் ராகுல்,தோல்பூர் மற்றும் பாரி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது,பிரதமர் மோடி 24 மணி நேரமும் தொலைக்காட்சி சேனல்களில் தோன்றுவதாகவும்,அனைத்து இடங்களிலும் சுவரொட்டிகள் காணப்படுவதாகவும் கூறினார். இதனை அவரிடம் கோடிக்கணக்கில் பணம்பெறும் தொழிலதிபர்கள் செய்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ஏழைகளிடமிருந்து 45 ஆயிரம் கோடியை எடுத்து அனில் அம்பானிக்கு மோடி வழங்கியது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறிய ராகுல்,அவரால் தன்னை பார்க்க இயலவில்லை என்றும்,அப்போது இந்திய இளைஞர்களின் கண்களைப் பார்த்து பேசும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை என்பதை இந்த நாடே பார்த்தாக கூறினார்.

 

 

Comment

Successfully posted