ஆர்பிஐயை அழிக்க மோடி கைப்பாவைகளுடன் முயற்சி - ராகுல் குற்றச்சாட்டு

Nov 19, 2018 03:52 PM 411

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மோடியின் கைப்பாவைகள் சீர்குலைக்க முற்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ரிசர்வ் வங்கி, சிபிஐ என இந்தியாவின் முக்கிய அமைப்புகளை அழிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூட்டத்திலும் அவரின் பொம்மலாட்டிகள் மூலம் ரிசர்வ் வங்கியை அழிக்க முற்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆர்பிஐ சுதந்திரம் அழிய போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி நாட்டின் முதுகெலும்பு என்பதனை அதன் கவர்னர் உர்ஜித் படேல் நீருபிப்பார் என நம்புவதாகவும் ராகுல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

Comment

Successfully posted