தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் : மோடி

Feb 10, 2019 04:15 PM 171

தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், அன்பு சகோதரர்களுக்கு வணக்கம் என்று தமிழில் உரையை தொடங்கினார். அர்ப்பணிப்பு உள்ள மக்கள் கொங்கு மக்கள் என்று புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, தொழில் முனைவோர் அதிகம் உள்ள பகுதி கொங்கு மண்டலம் என்றும் திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் பூமி இது என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியா அனைத்திலும் தன்னிறைவு பெறவேண்டும் என்பதே பாஜக அரசின் விருப்பம் என்று கூறிய பிரதமர் மோடி, கடல் முதல் வானம் வரை அனைத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் அதிக முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted