அம்மா உணவகத்தில் தொடர்ந்து இலவசமாக உணவு வழங்க வேண்டும்

May 07, 2021 01:48 PM 1142

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் தொடர்ந்து இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழை ஏளிய மக்களின் பசியாற்றும் அம்மா உணவகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 ம் ஆண்டு திறந்துவைத்தார். கடந்த 10 வருடங்களாக மலிவான விலையில் உணவை வழங்கி வரும் அம்மா உணவகம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை . கடந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கின் போது அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் பலரும் பயன்அடைந்தனர். இந்நிலையில் அதிமுகவின் சிறப்பான ஆட்சியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் சூரையாடி அராஜகத்தில் ஈடுபட்டனர். திமுகவினரின் இந்த செயலால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அம்மா உணவகம் மூலம் அதிமுக அரசு இலவசமாக அனைவருக்கும் உணவு வழங்கியது போல தற்போது பொறுப்பேற்கவுள்ள திமுக அரசும் தொடர்ந்து இதே விலையில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted