கடந்த 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் - அமெரிக்கா

Dec 01, 2018 05:20 PM 150

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியர்கள் அதிக அளவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவலில் 2014 முதல் தற்போது வரை 20 ஆயிரம் இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளது. இதில் ஆண்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ள அமெரிக்கா, இந்தாண்டு ஜூலை வரை 7 ஆயிரத்து 214 பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted