அமமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

Sep 14, 2021 04:35 PM 1295

அமமுக நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி, இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்தனர்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளச்சேரி பகுதியை சேர்ந்த அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சுரேஷ், அம்மா தொழிற்சங்க துணைச்செயலாளர் சுகுமார், இலக்கிய அணி துணை செயலாளர் சுந்தரம், மீனவர் அணி துணைச் செயலாளர் கலைவாணர் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். கழகத்தில் புதிதாக இணைந்தவர்களை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வரவேற்றார். நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற பாடுபடுவோம் என கழகத்தில் புதிதாக இணைந்தவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது, தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அசோக் உடனிருந்தார்.

 

Comment

Successfully posted