ஒரேநாளில் 2 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி

Sep 17, 2021 08:34 PM 633

ஒரே நாளில் 2 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தடுப்பூசி செலுத்தி வருவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் 75 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்தது. ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்துவது, இந்தியாவில் பல முறை நடத்தப்பட்டிருந்தாலும், தற்போது ஒரே நாளில் 2 கோடி பேருக்கும் அதிகமானோருக்கும் தடுப்பூசி செலுத்தி, இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை கொண்டாடும் விதமாக, டெல்லி மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இனிப்புகள் வழங்கினார். இதை தொடர்ந்து பேசிய அவர், இந்த சாதனையை வெற்றிகரமாக செயல்படுத்திய அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Comment

Successfully posted