5 லட்சத்திற்கு மேலான நகை மற்றும் ரொக்கப் பணம் கொள்ளை

Oct 19, 2018 02:45 PM 226

பெரம்பலூரில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 5 லட்சத்திற்கு மேலான நகை மற்றும் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

வடக்கு மாதவி சாலையில் கமலாதேவி என்பவர் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ள இவர், நேற்று விடுமுறை நாள் என்பதால் வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார்.

இன்று காலை வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், கமலாதேவிக்கு தகவல் அளித்துள்ளார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோல் வீட்டியின் மேல்மாடியில் செயல்பட்டு வரும் அலுவலகம் ஒன்றின் கதவை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Comment

Successfully posted