மார்பிங் போட்டோ கூட்டம் - தினகரனின் புது ஸ்டைல்...

Feb 09, 2019 12:52 PM 3923

பில்டப் விடுறோமோ...பீலா விடுறோமோ....அது முக்கியமில்லை...நாம என்னப் பண்ணாலும் இந்த உலகம் நம்மளை உத்துப்பாக்கணும்..(இந்த வடிவேலு காமெடி) இது இப்ப தினகரனுக்கு நல்லாவே பொருந்தும். தன்னைக் ஒரு கட்சிக்கு தலைவர் என்றும்...தனக்கு பின்னால் இருப்பது மக்களின் படை என்றும் பிதற்றிக்கொள்ளும் மக்கர் ஆன இந்த அமமுக கட்சி தலைவருக்கு எங்கு போனாலும் பல்ப் தான்.

அடி மேல அடி தான்.

எவ்வளவு அசிங்கப்பட்டாலும் தூக்கிப் போட்டு போய்கிட்டே இருப்போம்ன்னு தினகரன் நேத்து மக்கள் சந்திப்பு பயணம்ன்னு விழுப்புரம் கூட்டத்துல கலந்துக்க போனாரு. ஏற்கனவே ஸ்டாலின் கிராமசபைக் கூட்டம் நடத்துறங்கப் பேர்ல ஊர் ஊராய் போய் அசிங்கப்பட்டது பார்த்தும் இவரு, எப்படியும் நம்ம ஆளுங்க காசு கொடுத்தாவது கூப்பிட்டு வந்துருவாங்கன்னு போனாரு போல..

நிஜமாவே கூட்டத்துல கலந்துக்கப்போன தினகரனுக்கு மக்கள் வச்சாங்க பாருங்க ஒரு பெரிய டிவிஸ்ட்.

இந்த நிலையில தினகரன் மக்கள் கூட்டம் சூழ விழுப்புரம் கூட்டத்துல பேசுனாருன்னு ஒரு போட்டோ மற்றும் செய்தி வெளியானது. ஆனால் உண்மையிலேயே அந்த போட்டோ மார்பிங் செய்யப்பட்ட போட்டோ. தினகரன் போன இடம் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி தான். விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்ல மட்டும் போயிட்டு கூட்டம் இல்லாததால் வந்த பக்கம் திரும்பி போயிட்டாரு தினகரன்.

 விழுப்புரத்துக்கு தினகரன் ஏன்டா வந்தோம்?ன்னு நொந்து போற அளவுக்கு ஆயிடுச்சி. வழக்கமா ஒரு இடத்துல வித்தை காட்டும் போது கூட ஒரு கூட்டம் கூடும். ஆனால் அந்த கூட்டம் கூட அங்க இல்லைன்னா தினகரன் நிலைமையை நினைச்சிப் பாருங்க. முன்னாடிலாம் ஒவ்வொருத்தரா கட்சியை விட்டு ஓடுனாங்க..

இப்ப என்னன்னா ஒட்டுமொத்தமா ஓடிட்டாங்கப்போல. வழக்கம் போல அசிங்கப்பட்டது தான் மிச்சம். "பேசாம கோயில்ல மணி அடிச்சிட்டாவது இருந்துருக்கலாம்னு" வடிவேலு சொல்ற மாதிரி தினகரன் பேசாம விழுப்புரத்துக்கு போகாமயே இருந்துருக்கலாம்ன்னு மக்கள் பேசிக்கிறாங்க. "ஆளே இல்லாத கூத்துல அண்ணண் ராஜாவாம்" ன்னு அவர் விடுற பில்டப்புகளுக்கும், பீலாக்களுக்கும் என்ன ஆகப்போறாரோ!

Comment

Successfully posted

Super User

இவ்வாறாக அவ்வப்போது மக்களுக்கு இவர்களின் தவறுகள் தகிடுதத்தங்களை வெளிச்சசம்போட்டு காட்டுங்கள்.