மூளைக்காய்ச்சல் பாதிப்பில் குழந்தைகள் உயிரிழப்பு 100ஆக உயர்வு

Jun 17, 2019 12:41 PM 129

பீகாரின் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது.

முசாபர்பூரில் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூளைக் காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து முசாபர்பூரில் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் அனைத்திற்கும் வரும் 22ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளிகளும் காலை 10.30 மணிவரை மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காய்ச்சல் தற்போது கயா மாவட்டத்திற்கும் பரவிவருகிறது. மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted