முன் அறிவிப்பு இன்றி கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த நகைகள் ஏலம்

Sep 03, 2021 05:55 PM 2015

திருக்கோவிலூர் அருகே, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகுவைத்த நகை ஏலம் போனதாக அறிவிக்கப்பட்டதால், விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கடம்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நகைக்கடன் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், அடகு வைத்து 3 ஆண்டுகள் ஆன சுமார் 150 சவரன் தங்க நகைகள், அடகு வைத்தவர்களிடம் எந்த அறிவிப்பும் இன்றி ஏலம் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

image

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகை இட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், திடீரென விவசாயி ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.

விரைந்து அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், முற்றுகை இட்ட விவசாயிகளைக் கட்டுப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comment

Successfully posted