தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளது -அமைச்சர் கே.சி.கருப்பணன்

Mar 02, 2020 12:15 PM 623

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டதன் மூலம், தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை கிராமத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பங்கேற்று உரையாற்றினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உலக முதலீட்டு மாநாடு நடத்தி, தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் வர காரணமாக இருந்ததாக பெருமிதம் தெரிவித்தார். குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மட்டுமே அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளதாகவும், இதன்மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறினார்.

Comment

Successfully posted