‘வலிமை' படத்தில் இருந்து ‘அம்மா பாடல்' வெளியானது

Dec 06, 2021 05:04 PM 2364

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இதுதவிர சுமித்ரா, ஹுமா குரேஷி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை நீரவ் ஷா செய்துள்ளார்.

படத்தின் வேலைகள் ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும், படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லை என அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இதனை அடுத்து படக்குழு சில போஸ்டர்களை வெளியிட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கொண்டுவந்தது. இதனை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

‘நான் பார்த்த முதல் முகம்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல், யுவன் சங்கர் ராஜா இசையில், அம்மா - மகன் பாசத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது. விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வலிமை’, பெங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.


Comment

Successfully posted