அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

Jan 14, 2020 06:35 PM 205

தேனி மாவட்டத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்ததுடன் மாணவர்களுடன் தானும் விளையாடி மகிழ்ந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்த ‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை துவக்கியுள்ளார். தேனி  மாவட்டத்தில் முதல் கட்டமாக 4 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. போடி அருகே உள்ள  மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்திற்காக புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.   துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  புதிய விளையாட்டு மைதானத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களோடு துணைமுதலமைச்சரும் விளையாடினார். அதனைத்தொடர்ந்து துணை முதலமைச்சருக்கு, விளையாட்டு வீரர்கள்  பிறந்த நாள்   வாழ்த்து தெரிவித்தனர்.

Comment

Successfully posted