நாமக்கல் மாவட்டம் அருகே அம்மா பூங்காவை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்

Dec 09, 2018 09:19 AM 478

நாமக்கல் மாவட்டம் அருகே அம்மா பூங்காவை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசு, குழந்தைகள் மற்றும் இளைஞர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில், தமிழக அரசு சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையத்தை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பூங்காவில் குழந்தைகளுக்கான 20க்கும் மேற்பட்ட விளையாட்டு கருவிகளும், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக 10க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Comment

Successfully posted

Super User

good cm best scheme introduced helpful for Tamil nadu people.