பெற்ற மகள்களையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் - குமரியில் அவலம்!

Sep 29, 2020 06:10 PM 925

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், அடிக்கடி பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளியூரை சேர்ந்த ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

கடந்த 28ஆம் தேதி மாலை தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், அந்த வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரண்டு தனித்தனி அறைகளில், சிறுமிகளுடன் இருந்த ஆண்கள் இரண்டு பேர் அரை நிர்வாணத்தில் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை சுற்றி வளைத்த போலீசார் விசாரணை நடத்தியதில், குளச்சல் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் என்பதும், மற்றொருவர் தக்கலை பகுதியை சேர்ந்த சுனில் என்பதும் தெரிய வந்தது. பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களையும், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய லதா என்ற பெண்ணையும், போலீசார் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட லதாவிற்கு மூன்று மகள்கள், மூத்த மகள் கல்லூரியில் படிக்கின்றார், மற்ற இரு மகள்களும் பள்ளியில் 12-ம் வகுப்பு மற்றும் 10-வகுப்பு படிக்கின்றனர். மகள்கள் என்றும் பாராமல் அவர்களை பாலியல் தொழிலில் பெற்ற தாயே ஈடுபடுத்தியது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனா. கூடவே கடைசி மகளின் தோழி ஒருவரையும் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது தெரியவந்தது.

பகல், இரவு என்று தொடர்ந்து ஆண்கள் லதாவின் விட்டிற்கு வந்த செல்வதை அறிந்த ஊர்மக்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனையடுத்து நான்கு சிறுமிகளையும் மீட்ட போலீசார் தாய் லதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted