திருச்சியில் 2 மகன்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

Apr 20, 2019 08:38 AM 161

திருச்சியில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஊருடையாபட்டி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நாகராணி வேலைக்கு செல்வது பன்னீர்செல்வம் விரும்பவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் நாகராணி தன் மீதும் குழந்தைகள் இருவர் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்துகொண்டார். படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூவரும் பலியாயினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted