அம்பத்தூரில் பெட்ரோல் பங்க்கை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

Jan 04, 2019 01:43 PM 97

சென்னை அமப்த்தூரில் பெட்ரோலில் கலப்படம் செய்து விற்பனை செய்ததாக பெட்ரோல் பங்க்கை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, அம்பத்தூர் அடுத்த தொழிற்பேட்டை பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான H.P பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு வந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பி சென்ற சில நிமிடங்களில் வாகனங்கள் நடுவழியில் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கிற்கு திரும்பி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோலில் கலப்படம் செய்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள், பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Comment

Successfully posted