திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

Nov 12, 2019 03:16 PM 282

திரைப்பட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 28ம் தேதி 90வது பிறந்த நாளை கொண்டாடிய லதா மங்கேஸ்கர், மும்பையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதிகாலை திடீரென ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் கண்காணிப்பில் லதா மங்கேஸ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted